செவ்வாய், மே 16, 2006

குடித்துவிட்டு உளறாதே...!

நான் ரசித்த குஷ்வந்த் சிங் ஜோக்குகளில் ஒன்று.

இரண்டு குடிகார நண்பர்கள் நன்றாக குடித்து விட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர். அறைக்கு வந்தபின் ஒருவன் தன் சட்டையை கழற்றி மாட்டுவதற்க்கு சுவற்றைப் பார்த்தான். ஆனால் அங்கு எந்த ஆணியும் தென்படாததால் அவன் ஒரு ஆணியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வந்தான். வந்தவன் குடிபோதையில் ஆணியை தலைகீழாக வைத்துக் கொண்டு சுவற்றில் அடிக்க ஆரம்பித்தான். மிக நீண்ட முயற்சி செய்தும் ஆணி சுவற்றில் இறங்காததால் என்ன காரணமாக இருக்கும் என்று ஆணியை உற்று கவனித்தான். அப்பொழுது தான் அவனுக்குத் தெரிந்தது ஆணி தலைகீழாக இருப்பது. ஆனால் அவன் என்ன செய்தான் தெரியுமா? தன் மற்றொரு குடிகார நண்பனை அழைத்து "இதோ பாருடா. முட்டாள் பயல்கள். ஆணியின் தலையை கீழே வைத்துத் தயாரித்திருக்கிறார்கள்" என்றுக் கூறினான்.

அதற்கு அவனுடைய நண்பன் "அடப்போடா குடிகாரப் பயலே. குடித்துவிட்டு உளறாதே.
ஆணியைத் தயாரித்ததெல்லாம் சரிதான். ஆனால் அந்த ஆணி எதிர்த்த சுவற்றிற்குரியது"
என்றானே பார்க்கலாம்.

நண்பர்கள் இருவரும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் அல்லவா?

3 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

சிரிப்பு துணுக்கு நல்ல இருந்தது. நல்ல சேவை

வல்லிசிம்ஹன் சொன்னது…

அடிக்கடி சிரிப்பு பார்க்க வரலாம் போலிருக்கே. நன்றாக இருக்கிறது.

இராஜகிரியார் சொன்னது…

வருகைத் தந்த அனைவருக்கும் இன்னும் பாராட்டி ஊக்குவித்த கோவிகண்ணன் மற்றும் மனு அவர்களுக்கும் நன்றிகள்.