திங்கள், மார்ச் 27, 2006

வளைகுடாவில் தொலைந்தவனே..

என்னைத் தொட்ட கவிதைகளில் ஒன்று. காரணம் வளைகுடா அனுபவமோ என்னவோ...
அதை வாசகர்களில் பார்வைக்காக இங்கு தருகிறேன்.




இளமையின் சுமை
அறியாதவனா நீ..?
கரைபுரளும்
என் கண்ணீரின்
கதை தெரியாதவனா நீ..?
சுகங்களின் முகவரியை
எனக்குச் சொல்லிக் கொடுத்தவனே..
பிறகு ஏன்
தனிமையில் என்னை கிடத்தி
கடல் கடந்து
யாரை கெளரவப்படுத்தப் போயிருக்கிறாய்..??
எதை பெறுவதற்காக
என்னை இழந்துக் கொண்டிருக்கிறாய்..??
வற்றிவிடும் இளமை வராது திரும்பவும்..
வளைகுடா மறந்து வா சீக்கிரம்..!!
இந்த முறையாவது
என் வயிற்று வலியையும் வாந்தியையும்
வாங்கிக் கொள்ள என் பக்கத்தில் நீயிரு..!!

--அபிரேகா அலாவுதீன்

நன்றி: வழுத்தூர்.காம்

3 கருத்துகள்:

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

are you from rajagiri of thanjavur(near papanasam?)
how are you?

இராஜகிரியார் சொன்னது…

ஆம் திரு. சிவஞானம்ஜி அவர்களே. நான் பாபநாசம் அருகேயுள்ள இராஜகிரியைச் சேர்ந்தவன் தான். என் வலைத் தளத்தில் எங்களூரின் இணைத்தளத்திற்கான இணைப்பும் உள்ளதே. தாங்களுக்கு எந்த ஊர்? பாபநாசம் அருகிலா?

Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…

இது அந்தப்பெண்ணின் உள்ளக்குமறல்களின் வெளிப்பாடு வாரத்தைகளாய் வந்திருக்கிறது

நல்ல கவிதை நண்பா..